Tuesday, August 12, 2014

நியூட்ரினோ ஆய்வில் தமிழ்நாடு - The Neutrino Laboratory in Tamilnadu


நியூட்ரினோ ஆய்வில் தமிழ்நாடு
நியூட்ரினோக்கள், அண்டம் முழுவதும் பரவிக் கிடக்கின்றன. ஏறக்குறைய நூறாயிரம் கோடி நியூட்ரினோக்கள் ஒவ்வொரு விநாடியும் நமது உடலுக்குள் புகுந்து வெளியேறிய வண்ணம் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் வரை, நியூட்ரினோக்களும் ஒளித்துகள்களைப் போல (போட்டான்) எடை (மாஸ்) அற்றவை என கருதப்பட்டது. ஆனால் 1998ம் ஆண்டு, நியூட்ரினோக்களுக்கு எடை உண்டு என கண்டுபிடிக்கப்பட்டது. சமீப கால இயற்பியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் நியூட்ரினோவைப் பற்றிய உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு 2002 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
நியூட்ரினோ என்பது சூரியன் மட்டுமல்லாது விண்மீன்களிலிருந்தும் வெளிப்படும் அணு துகள்களாகும். கனமற்ற இத்துகள்கள் விண்வெளியிலிருந்து கீழிறங்குகின்றன. பல கோடி நியூட்ரினோக்கள் பாய்ந்த வண்ணம் இருந்தாலும் அவற்றை ஈர்த்து, ஆய்வு செய்வது கடினம். இந்த அணுத்துகளைப் பிடித்து அதனை ஆய்வு செய்தால் சூரியன் குறித்த ரகசியங்களையும், விண்வெளியின் ஆற்றல் பற்றியும் பூமியின் பிறப்பு குறித்தும் தெரிந்து கொள்ளலாம் என்ற நோக்கத்துடன் நியூட்ரினோ ஆய்வு முயற்சி 1930களில் இருந்து தொடங்கியது. நியூட்ரினோ துகள்களை ஒரு கருவி மூலம் ஈர்த்து அவற்றை ஆய்வு செய்வதுதான் நியூட்ரினோ ஆய்வகத் திட்டம்.
இந்தியாவில் முதன் முதலாக காஸ்மிக் கதிர்களில் இருந்து உண்டாகும் நியூட்ரினோக்கள், கோலார் தங்க வயல் சுரங்கத்தில், 1965 ல் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் இச்சுரங்கங்கள், 15 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டு விட்டன. எனவே, மீண்டும் இந்த ஆராய்ச்சியை நடத்துவதற்காக இந்திய நியூட்ரினோ அறிவியற்கூடம் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பல அறிவியல் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் இணைந்து இந்த பாதாள அறிவியல் கூடத்தை அமைக்க முன் வந்துள்ளன. சுமார் 100 விஞ்ஞானிகள், பொறியாளர்கள் இப்பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நியூட்ரினோ ஆய்வகத்தை சாதாரண தரைத்தளத்தில் அமைக்கமுடியாது. கருங்கல்  (சார்கோநைட்) பாறைப்படிவம் நிறைந்த செங்குத்தான மலைப்பகுதியில், அதுவும் மழைப்பொழிவு அதிகமில்லாத நிலையான புவியியல் அமைப்பைக்கொண்ட பகுதியில் தான் ஆய்வகத்தை அமைக்கமுடியும். 10 மீட்டர் அகலமும், 250 மீட்டர் (2.5 கிலோ மீட்டர்) நீளமும் உள்ள இந்த நியூட்ரினோ ஆய்வகமானது மலையிலிருந்து சுரங்கம் அமைத்து ஆழத்தில் அமைக்கப்படவேண்டும். இந்த அமைப்பு முறையே நியூட்ரினோ ஆய்வுக்கான அடிப்படை வசதியைத் தரும்.

தற்போது இந்த ஆராய்ச்சிக் கூடம், தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் தேவாரம் அருகேயுள்ள பொட்டிப்புரம் எனும் ஊரிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் உள்ளே அமைக்கப்படுகிறது. மலையின் உச்சியில் இருந்து 1.3 கி.மீ., கீழே, மலையின் அடிவாரத்தில் 2.5 கி.மீ., தூரத்திற்கு சுரங்கப் பாதை தோண்டப்படும். அதையடுத்து பெரிய ஆய்வுக் கூடம் அமைக்கப்படும். அங்கு 50 கிலோ டன் இரும்பிலான நியூட்ரினோ காணும் கருவி (டிடெக்டர்) அமைக்கப்படும். இதைச் சுற்றி, நான்கு திசைகளிலும் மேலேயும் கீழேயும் குறைந்தபட்சம் ஒரு கி.மீ., பரிமாணமுள்ள பாறை இருந்தால் தான், ஆராய்ச்சி நடத்த முடியும். இவ்வளவு பெரிய பாறையால் தான், வானவெளியில் இருந்து வரும் காஸ்மிக் கதிர்களை தடுத்து, நிறுத்த முடியும். அதன் பிறகு தான், நியூட்ரினோவை காண முடியும். முதற்கட்டமாக .என்.., கூடத்தில், காஸ்மிக் கதிர்கள் உண்டாக்கும் நியூட்ரினோக்களைப் பற்றி ஆராய்ச்சிகள் நடத்தப்படும். அடுத்த கட்டம், மிக முக்கியமானது. ஜப்பான், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் அதி ஆற்றல் வேக வளர்ச்சி ஆலைகள் (High Energy Accelerators) உண்டாக்கும் நியூட்ரினோக்கள், ஆயிரக்கணக்கான கி.மீ., தொலைவை பூமியின் உள்ளே கடந்து, .என்.., கூடத்தை வந்தடையும்.
இந்த நியூட்ரினோ திட்டம் குறித்து முன்னாள் குடியரசுத்தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல்கலாம் "நியூட்ரினோ திட்டம் நியூட்ரினோவின் எடை வரிசையை அறிவியல் முறையில் ஆராய்ந்து கண்டு பிடிக்கும். தேனி பகுதியிலும், அதன் சுற்று வட்டாரங்களிலும் உள்ள, அறிவியல் நிலையங்களும், கல்லூரிகளும் இந்த நியூட்ரினோ திட்டத்தால், மேலும் வலுப்படுத்தப்படும். நான் அறிவியலாருடன் கலந்து ஆலோசித்த போது, தோண்டி எடுக்கப்படும் கற்கள், நியூட்ரினோ ஆராய்ச்சிக் கூடம் மற்றும் சாலைகள் உண்டாக்குவதற்கு பயன்படுத்தப்படும் என்று கூறினர். பொதுமக்களும் இதனால் பயனடைவர். ஐரோப்பாவில் உள்ள செர்ன் ஆராய்ச்சி நிலையம், அதன் பெரிய ஹாட்ரான் கொல்லைடர் திட்டத்தால் புகழடைந்தது போன்று, தேனியும் அதன் சுற்றுவட்டாரமும், நியூட்ரினோ அறிவியல் திட்டத்தால் புகழடையும். திட்டத்தில் உள்ளவர்கள், இந்த வட்டாரத்தின் சுற்றுப்புறச் சூழலின் முழுத்தேவைகளை கவனத்தில் கொண்டு செயல்படுத்துவர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
நியூட்ரினோ ஆய்வு என்பது இயற்கையைப் பற்றிய புரிதலுக்கான அடிப்படை ஆய்வு என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் இத்திட்டம் குறித்த எதிர்மறையான கருத்துக்களோடு இரண்டு தரப்புகள் மோதிக்கொள்கின்றன. ஒன்று - கண்மூடித்தனமான எதிர்ப்பு, இன்னொன்று கண்மூடித்தனமான ஆதரவு. இத்திட்டத்தின் பயன், அதன் நம்பகத்தன்மை, அதனால் ஏற்படும் உடனடி அல்லது நீண்டகால விளைவுகள் போன்றவற்றை கவனமாக பரிசீலிக்க மக்கள் தயாராக இல்லை.
நியூட்ரினோ என்பது அணுத்துகள், எனவே ஆய்வில் அணுசக்தி வெளிப்படும்என்ற பாமரத்தனமான வதந்தி ஒருபுறம். விஞ்ஞானிகள் பக்கமோவளர்ச்சிக்கட்டத்தில் ஏற்படும் சூழல் பாதிப்பு என்பது தவிர்க்கமுடியாதது. எனவே பாதிப்புகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்என்றும் விவாதங்கள் தொடர்கின்றன.
கதிர்வீச்சு கொண்ட தனிமங்கள் சிதையும் போதோ அல்லது அணு இணைவு, அணு சிதைவின் போதோ, கதிர்வீச்சுக்கள் பட்டு அணுக்கள் சிதையும் போதோ உருவாகும் இயற்கையான துணை அணுத் துகள் தான் நியூட்ரினோ. பெரும்பாலும் சூரியனில் நிகழும் அணு இணைவின்போது (nuclear fusion) இது உருவாகிறது.
ஒளியின் வேகத்தில் பயணிக்கும் இந்தத் துகள் கிட்டத்தட்ட எடையே இல்லாதது. இதை கண்டுபிடிப்பதே கடினமாக உள்ளது. சூரியனிலிருந்தும் விண்மீன்களில் இருந்தும் கிளம்பும் இந்த நியூட்ரினோக்கள் அண்டவெளியில் படுவேகத்தில் பயணித்து, பூமியிலும் தங்கு தடையின்றி உலா வருகின்றன. சராசரியாக ஒரு மனிதனி்ன் உடலில் ஒரு வினாடிக்கு 50 டிரில்லியன் நியூட்ரினோக்கள் நுழைந்து வெளியேறுகின்றன.
ஆனால், இந்த நியூட்ரினோக்களைபிடிப்பதுஅவ்வளவு எளிதல்ல, மிக மிகக் கடினம். எந்தப் பொருளோடும்ரியாக்ட்செய்யாத தன்மை கொண்ட நியூட்ரினோக்களை பரிசுத்தமான நீரில் தான்பிடிக்கமுடியும் என்பதால் அண்டார்டிகா மற்றும் ஆர்க்டிக் பகுதிகளில் ஆய்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 உலகிலேயே ஏன் பிரபஞ்சத்திலேயே அதிவேகத்தில் செல்லக்கூடியது ஒளி. இது நேற்று வரையான விடையாக இருந்தது. ஆனால் இன்று விடை மட்டுமல்ல அறிவியல் கொள்கையும் மாறிப்போயிருக்கிறது. காரணம் நியூட்ரினோ (Neutrino). அறிவியல் கண்டு பிடிப்புகள் உண்மையானவை என்றாலும் காலத்திற்கேற்ப, ஆழ்ந்த ஆராய்ச்சிகளின் பயனாக, மாற்றமடையக் கூடியவை அல்லது அதிநுட்ப, மிகவும் துல்லியமான முடிவுகளை கொடுக்கக்கூடியவை. அவ்வகை யில் ஒளியின் வேகமே வேகங்களின் இறுதியாக, எல்லையாக இருந்தது. இந்த எல்லையைத்தான் நியூட்ரினோவின் வேகம் மாற்றியமைத் திருக்கிறது.
ஒளியை ஓடி தோற்கச் செய்த  நியூட்ரினோக்கள் எங்கிருக்கின்றன? நம்மிடையேதான். கண்களுக்கு புலப்படதாவையாக அரூபிகளாக. நம்முடைய உடலே சில சமயம் நியூட்ரினோக்களை உற்பத்தி செய்கின்றது என்பதை நம்ப முடிகிறதா? ஆனால், உண்மை. நம் உடல் உற்பத்தி செய்கின்றது. நமக்கு அவற்றை காணவோ, உணரவோ முடியாது. நம்மைச் சுற்றி கண்ணுக்கு புலப்படாதவையாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற கண்களுக்கு புலப்படாத துகள்கள் இருபதாம் நூற்றாண்டில் அணு இயற்பியலுக்கு வழி வகுத்ததுடன், பொருட்களின் மிகச்சிறிய அலகு வரை மனிதனின் அறிவினை எட்டிப் பார்க்கச் செய்தது. அது போலத்தான் இயற்பியலில் நியூட்ரினோக்களின் வேகம் பற்றிய கண்டுபிடிப்பு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவிருக்கிறது.
இப்பிரபஞ்சத்தில் நம்மைச் சுற்றி சாதாரணமாக நிலவுவதும், ஆனால் நமக்கு யாதொரு விதத்திலும் அறிந்து கொள்ள இயலாமல் இயங்குவதும் நியூட்ரினோ என்னும் துகள்களாகும். சாதாரணமாக காற்றினை துளைத்துக்கொண்டு செல்வதைப் போல நியூட்ரினோக்கள் பூமியை துளைத்துக் கொண்டு செல்லும் ஆற்றல் படைத்தவை. இதனை கண்டுபிடித்து அரை நூற்றாண்டு ஆகிவிட்ட போதிலும் நியூட்ரினோக்களை குறித்த நம்முடைய தகவல் மிகக்குறைவே. நம்மைச் சுற்றியுள்ள நியூட்ரினோக்களில் ஒரு சிறிய அளவு பூமிக்கடியில் ரேடியோ ஆக்டிவ் மூலத்தினின்று வெளிப்படுபவை. நம் உடலிலுள்ள எலும்புகளில் காணப்படும் மிகக் குறைவான அளவு ரேடியோ ஆக்டிவ்  சக்தியுள்ள பொட்டாசியம் மற்றும் கால்சியம் ஆகிய மூலங்கள் உண்டாக்குபவை. ஆனால் மிக அதிகமான அளவு நியூட்ரினோக்கள் சூரியனி லிருந்து வருபவை நியூட்ரான் களேயாகும். தற்போது நிகழ்த்தப்பட்ட சோதனையை பார்க்கும் போது சூரியனின் கதிர்கள் நம்மை வந்தடைவதற்கு முன்பே நியூட்ரினோக்கள் நம்மை தொட்டுவிடும். மேலும் நியூட்ரினோக் களின் ஊடுருவும் சக்தி அபாரமானது. சூரியனைக் கூட ஊடுருவி பார்க்க முடியும். ஆச்சர்யமான தகவல்தான்.
இந்தத் துகளை ஆய்வு செய்தால் சூரியன், விண்மீன்கள் உள்பட விண்வெளியின் பல ரகசியங்களுக்கு விடை காண முடியும் என்று நம்பப்படுகிறது.
குறிப்பாக ஒரு விண்மீன் இறங்கும்போது, முதலில் அது உள்ளுக்குள் வெடித்துச் சிதறும். அப்போது அதன் மையப் பகுதி பல லட்சம் மடங்கு விரிவடையும். அந்த நேரத்தில் நட்சத்திரத்தின் மையப் பகுதியில் அளவிட முடியாத அளவுக்கு மாபெரும் அழுத்தம் உருவாகும். அந்த அழுத்தத்தில் இருந்து எந்த ஒரு பொருளும், ஒரு அணு கூட வெளியேஎஸ்கேப்ஆக முடியாது. ஆனால், அப்படிப்பட்ட ஒரு மரணிக்கும் நட்சத்திரத்திலிருந்து கூட தப்பி வரும் ஒரே துணை அணுத் துகள் நியூட்ரினோ மட்டும்.
எனவே, நியூட்ரினோவைப் பற்றி கொஞ்சம் நன்றாக ஆராய்ந்தால் பல்வேறு ரகசியங்களுக்கு, நட்சத்திரம் ஏன் இறக்கிறது என்பதில் ஆரம்பித்து, விடை கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
1980-இல் மின்சுமையில்லாத, எடை யில்லாத துகள்கள் அணுவின் உட்கருவிலிருந்து பீட்டா கதிர்களுடன் வெளிவருகின்றன என்று முதன்முதலில் உல்ப்காங்பௌலி (Wolfgang Pauli) என்னும் அறிவியல் விஞ்ஞானி கூறினார். இந்த துகள்களை நியூட்ரான் என்றழைத்தார். ஆனால் 1932-ஆம் ஆண்டு ஜேம்ஸ் சாட்விக் அணுக்கருவிலிருந்து புரோட்டானுடன் இணைந்து நியூட்ரான் என்னும் துகளை கண்டறிந்தார். பௌலி முன்வைத்த கருத்தில் யதார்த்தத்தில் இருவகை யான நியூட்ரல் துகள்கள் இருந்தது. ஒன்று  அணுவின் உட்கருவில் புரோட்டானுடன் காணப்படுவது.  இது அணுசக்தி அறிவியலின் அடிப்படையான நியூட்ரான் துகள்.  
மற்றொன்று பீட்டா துகள்களுடன் வெளி வரும் உருவமற்ற மின்சுமையற்ற, எடையற்ற ஒரு துகள். அதாவது பூஜ்யம் என்றுகூட கூறலாம். என்ரிகோ பெர்மி இத் துகளுக்கு அரை சுழற்சி உண்டென்று கண்டறிந்தார். அணுவின் உட்கருவில் சீனியரான நியூட்ரானிலிருந்து இதனை வேறுபடுத்தி அறிய பெர்மி நியூட்ரினோ என்று பெயரிட்டார்.
நியூட்ரினோவை கண்டுபிடித்த முறை
OPERA (Oscillation Project with Emulsion- Tracking Apparatus) என்னும் கூட்டமைப்பு நியூட்ரினோக்களின் ரகசியத்தை கண்டறிவதற் காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. அது ஜெனீவாவிலுள்ள செர்ன்  (CERN)ஆராய்ச்சி கூடத்தில் சூப்பர் புரோட்டான் சிங்க்ரோட் ரானில் உண்டாக்கப்படுகின்ற நியூட்ரினோக் களை இத்தாலியில் கிரான்சாசோ LGNS  என்னும் புவிக்கு அடியில் அமைந்துள்ள ஆராய்ச்சிகூடத்திற்கு, பூமிக்கடியில் 733 கி.மீ. தொலைவு செலுத்தக் கூடிய வகையில் எல்லா வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகும். டௌ நியூட்ரினோக்களுக்கும் மியூவான் நியூட்ரி  னோக்களுக்கும் இடையே நடக்கும் அலை யுறுதல்  (Oscillation)  நிகழ்ச்சியை துல்லியமாக இந்த ஆராய்ச்சியினால் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. செர்ன் (CERN)-ல் ஒரு தரத்திலுள்ள நியூட்ரினோவை உண்டாக்கி விட்டால் அது வேறொரு வகையான நியூட்ரி னோவாக கிரான் சாசோவில் சென்றடை கின்றதா என்பதைத் தான் இப்பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. நியூட்ரினோவின் வேகத்தை பற்றிய தகவல்களை () உண்மை களை கண்டுபிடிப்பதுதான் இவ்வாராய்ச்சியின் முக்கிய நோக்கம்.
நியூட்ரினோக்களின் வேகத்தினை கண்டு பிடிக்க செர்ன் ஆய்வுக்கூடம் வேகப்பரி சோதனையை மேற்கொண்டது. இதன்படி ஓரிடத்திலிருந்து நியூட்ரினோ புறப்பட்டு குறிப்பிட்ட மற்றொரு இடத்தினை அடைவதற்கு எடுத்துக் கொள்ளும் கால அளவு எவ்வளவு என்பதனை கண்டுபிடிப்பது. இரு இடங்களுக்கிடையேயான தூரத்தை நியூட்ரினோ துகள் கடக்க எடுத்துக்கொண்ட நேரத்தினால் வகுக்க கிடைப்பது அதன் வேகம் என்ற எளிய பரிசோதனையைத்தான் செர்ன் கையாண்டது. ஆனால் இப்பரி சோதனையின் ஒவ்வொரு கட்டமும் அவ்வளவு எளிமையானதாக இருக்கவில்லை. நியூட்ரினோ என்னும் கண்ணுக்கு புலப்படாத துகள் புறப்படும் நேரத்தினையும் அது இலக்கினை வந்தடையும் நேரத்தினையும் துல்லியமாக கவனிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஒரு சவாலான காரியமாக இருந்திருக்கிறது. உண்மையில் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்ற நியூட்ரினோக்களை கண்டறிவதே கடினமான விஷயம்தான். கடந்த மூன்று வருட காலத்தில் ஆய்வுக் குட்படுத்தக்கூடிய வகையிலான 16000 நியூட்ரினோ துகள்களையே செர்ன் பிடித்துள்ளது என்பதனை மட்டும் அறிந்தால் போதும், இதிலுள்ள சிரமம் எளிதில் விளங்கும்.
உயர் ஆற்றல் கொண்ட புரோட்டான் கற்றைகளை பெரிய கிராபைட் கட்டுகளின் மீது மோதச் செய்யப்படும்போது வித்தியாச மான அளவுகள் கொண்ட சிறிய அணுக்கள் உற்பத்தியாகின்றன.
அவற்றில் சில சிறிய அணுக்களாக மாறி நியூட்ரினோக்களாக உருவாகின்றது. செர்ன் ஆய்வுக்கூடத்தில் உருவாகும் இந்த நியூட்ரி னோக்கள் பூமியின் அடியில் நேர்க்கோட்டில் பயணித்து கிரான்சாசோ ஆய்வுக் கூடத்தை வந்து சேரும். உருவான அனைத்து அணுக் களும் பூமிக்கடியில் தொலைதூரம் செல்லக் கூடிய ஆற்றல் பெற்றிருப்பதில்லை. குறைவான ஆற்றல் கொண்டவை இடையிலேயே நின்றுவிடும். செர்னிலிருந்து புறப்படும் மியூவான் நியூட்ரினோக்கள் இடையில் டௌ(Tau) நியூட்ரான்களாக மாறுகின்றன. இது மீண்டும் பழைய நிலைக்கே திரும்புவதனால் ஒரு அலை வுறுதலை ஏற்படுத்துகின்றது. உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரினோக்கள் கிரான் சாசோவினை வந்தடையும்போது அவை நியூட்ரினோ டிடெக்டர் (கண்டு பிடிப்பான்) என்னும் கருவியினால் பிடிக்கப் படும். நியூட்ரி னோக்கள் செர்ன் ஆய்வகத்திலிருந்து புறப் படும் கால அளவுகளின் வரை படத்தினையும், கிரான்சாசோவில் நியூட்ரினோக்கள் வந்தடை கின்ற கால அளவுகளின் வரை படத்தினையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அவை புறப்பட்ட மற்றும் சென்றடைந்த காலஅளவும் கணக்கிடப்படுகிறது.
இந்த ஆய்வில் இரு ஆய்வுக்கூடங்களுக் கிடையேயான தூரத்தைக் கடக்க 2.4 மில்லி செகண்டு கால அளவு மட்டுமே ஆனது. கால மாற்றம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் ஒரே சமயத்தில் இரு இடங்களில் நேரம் மாறுபடும். இந்த வித்தியாசமான இரு இடங்களில் நேரங்களும் ஒருங்கிணைந்து செயல்படச் செய்வது ஆய்வில் மிக முக்கிய மான பாகமாகும். ஏடநGPS (Global Positioning System)  வழியே இந்த ஒருங்கிணைப்பு செய்யப்படுகிறது. ரேடியோ அலைகளின் வழியாக இரு இடங் களுக்கிடையே தொடர்பை நிலைநிறுத்திக் கொண்டு இது நடைபெறுகிறது.
இவ்வாறு நடத்திய பரிசோதனையில் நியூட்ரினோக்களின் வேகம் ஒளி வெற்றிடத்தில் செல்லும் வேகத்தைவிட 60 நானோ செகண்டுகள் முன்னே சென்றது. அதாவது ஒளியின் வேகம் 29, 97, 92, 458 மீ/  செகண்டு. நியூட்ரினோவின் வேகம் 29, 97, 98, 454 மீ/ செகண்டு. வித்தியாசம் 5996 மீ/ செகண்டு. ஒரு செகண்டில் ஒளியைக் காட்டிலும் 5996 மீட்டர் நியூட்ரினோ முன்னே சென்றிருக்கும். உண்மையிலேயே நியூட்ரினோ ஒளியின் வேகத்தை மிஞ்சுகிறதா? இல்லை தவறான கணக்கா? என நம்பிக்கை வராத அறிவியலர்கள் 15000 முறை இச்சோதனையை திரும்பத் திரும்பச் செய்து பார்த்தனர். அனைத்து முறையும் ஒரே முடிவுதான் கிடைத்தது. இதனை சிறிது தயக்கத்திற்கு பின்னர்தான் அறிவி யலர்கள் வெளி உலகுக்கு அறிவித்தனர். ஏன் அவ்வாறு செய்தனர் என்பதற்கு காரணம் உண்டு.
கடந்த இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியலராக கருதப்படுபவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இவருடைய சிறப்பு ஒப்புமை கோட்பாட்டின் (Special General Relativity Theory)  அடிப்படை விஷயங்களில் ஒன்று ஒளியின் வேகம். பிரபஞ்சத்தில் மிகவும் வேகமானது ஒளியின் வேகம் எனவும் அதனைவிட வேகத்தில் போக யாரும் முயற்சி செய்ய வேண்டாம் எனவும், அப்படி முயன்றாலும் முடியாது என கூறியவர் ஐன்ஸ்டீன்.  இருபதாம் நூற்றாண்டு அறிவியலர்கள் தங்களுடைய சொந்த சிந்தனையில் ஆராய்ந்தார்கள் என்பதனைவிட 1905-இல் ஐன்ஸ்டீன் முன்வைத்த சிறப்பு ஒப்புமைக் கோட்பாட்டை பின்பற்றி சிந்தித்தனர் என்பதே பொருத்தமாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால் ஒரு நூற்றாண்டு முழுவதும் இயற்பியலில் நிகழ்ந்த சிந்தனைகள் அனைத்தும் ஒளியின் வேகத்தினை  எல்லை யாகக் கொண்டே இருந்தன. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அறிவியல் உண்மை மாறுகின்றது. மேலும் ஒரு நூற்றாண்டு கால பாடங்கள் அத்தனையும் திருத்துவது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. என்றாலும் புதிய அறிவியல் கண்டு பிடிப்புகளுக்கு தக்கவாறு மாறித்தானே ஆக வேண்டும். உலகில் மாறாதது என்று ஒன்றுமில்லை.
ஆராய்ச்சி நிலையம், மலைக்கு உள்ளே வெகுஆழத்தில் அமைக்கப்படும். மலைக்கு வெளியே உள்ள காடுகளுக்கோ, வயல்களுக்கோ பாதிப்பு ஏற்படாது
ஆராய்ச்சிக்கூடத்தில் எந்தவிதமான, ஆபத்தான கதிர்வீச்சு பொருட்களும் பயன்படுத்தப்படாது. சுற்றுப்புறம், காற்று மண்டலம், நீர், நில வளத்தை நியூட்ரினோ ஆராய்ச்சி பாதிக்காது.

பலன்கள்: இதன்மூலம் இயற்பியல், கணினி அறிவியல், பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆராய்ச்சி நோக்கத்திற்காக நியூட்ரினோ ஆய்வகம் அமைய உள்ளது.

Neutrino Laboratory



Neutrinos, are scattered throughout the universe. Neutrinos are nearly hundred thousand crore has been kicked out of every moment they enter our body. Until a few years ago, as Neutrinos olittukalkalaip (photon), weight (mass) was seen as inconsequential. But in 1998, found that neutrinos have a weight. Facts about physics and space research niyutrinovaip discovered in recent time. Nobel Prize for the year 2002 was awarded to scientists who discovered them.

automic particles exposed to the sun, not only universe neutrino. Kilirankukinrana ittukalkal light from space. Neutrinos fired from the color attracts millions of them, are difficult to study. Hold this anuttukalaip examining it for clues about the sun, space and Earth's energy neutrino physics research with the aim to learn about the birth of the effort began in the 1930s. Neutrino particles pulling them with a tool to analyze the neutrino observatory project.

Neutrinos from cosmic rays produced in India for the first time, Kolar Gold Fields mine, discovered in 1965. But iccurankankal, 15 years ago have been closed. So, again, this research program has been developed to accommodate the Indian Neutrino ariviyarkutam. Many scientific institutions in India, in collaboration with universities to form the underground science lab have been before. About 100 scientists, engineers actively engaged in the task.

The neutrino laboratory on the ground floor cannot be normal. Basalt (carkonait) paraippativam a steep hillside, the rainfall in the area is no more than a fixed geographic system can build the lab. 10 meters wide, 250 meters (2.5 km) long tunnel in the mountains to the neutrino laboratory building constructed in depth. This facility will provide the basis for the study of neutrino composition.

Currently, research labs, Thevaram in Theni district in Tamil Nadu, near the town of pottippuram set inside of the Western Ghats. 1.3 km from the mountain's top, bottom, at the foot of the hill 2.5 km tunnel will be dug. Then set up a large research laboratory. There are tons of 50 kg steel neutrino finding tool (titektar) set. Around it, at least a kilometer down the four directions, the dimension of the rock, which is able to conduct research. If the rock is so big, block incoming cosmic rays from space, can stop. Only then, can be seen in the neutrino. Aieno first phase, in the hall, conducted research on cosmic rays, which produce neutrinos. The next step, is very important. Japan, Switzerland, the United States, countries such as the high-speed growth of power plants (High Energy Accelerators), which produce neutrinos, thousands of km, the distance across the inside of the earth, aieno, arrive at the hall.

The neutrino project of former President scientist Abdul "Neutrino Project neutrino weight sequence to the scientific method to explore to find out. Theni area, the circuit blocks, in science centers, colleges, the neutrino project, further strengthened.'ve Scientist in consultation with the course, digging taken stones, neutrino Research Center and the roads to make the used that. civilians and thus beneficial. Europe's CERN research center, who’s giant hatran kollaitar project and was like, Theni and its neighborhood, neutrino science project admiration. Intent, the region's environment muluttevaikalai in mind implements, "he said.

The study, based on an understanding of the nature of the neutrino in the study is unlikely to happen for anyone to disagree. But the two parties collide with negative comments about the project. One - blind resistance, another blind support. The program's effectiveness, its reliability, and its immediate or long-term effects caused by such people are not willing to consider carefully.

"The neutrino is a particle, and therefore exposed to the study of nuclear power," let alone the pamarattanamana rumor. Scientists pakkamo "valarccikkattat inevitable impact on the environment. So the damage has to be acknowledged that "discussions are continuing.

During the decay of radioactive elements or nuclear fusion, nuclear decay during, sub-nuclear particle radiation from natural silk is produced when atoms of neutrino decay. Often occurring in the sun during a nuclear mate (nuclear fusion) is formed.

The very weight of the particle is traveling at the speed of light is almost non-existant. It is hard to find. The neutrinos from the Sun and the stars traveled in space patuvekat, earth effluent being browsed. An average of 50 trillion neutrinos manitanin body into a second exit.

However, the neutrinos 'capture' is not easy, so it's very difficult. No meaning 'reacted' holy water that was not the nature of neutrinos with the 'catch' of the Antarctic and Arctic regions can be arranged at the study centers.

  Why in the world carried the light of the universe to expand exponentially. It was the answer to yesterday. But today, the answer is not only a scientific principle and marippo. Because neutrinos (Neutrino). Though genuine scientific discoveries, from time to time, as a result of intense research, the ability to change or advanced, having the most accurate results. In the light of the rate to the end of such speeds, the border was not. The ellaiyaittan neutrino's speed has been altered.

Where torkac who ran the light neutrinos? Nammitaiyetan. Pulappatatavai eyes of the arupikal. Can you believe that it is our body that, in some cases, the production of neutrinos? But, true. Our body produces. We view them, can not feel pain. Are working around us, invisible. Such particles are invisible to the eyes of the twentieth century, cleared the way for nuclear physics, materials of the smallest unit up to see the reach of man's knowledge. It's like the discovery of the speed of neutrinos in physics has been the biggest change.

In the universe around us simply ongoing, but no way for us to know the pieces of the neutrino unable to function. As the air punctured simply to have the ability to penetrate the earth with neutrinos. Although this finding has become a half-century of neutrinos mikakkuraive our own information. Neutrinos are around us in a small amount of radioactive derivatives velippatupavai underground. The bones found in our body is the lowest power radio-active sources of potassium and calcium untakkupavai. But the ones from very high levels of neutron kaleyakum curiyani neutrinos. When the sun's rays to reach us from viewing the test performed before the neutrinos reach us. More penetrating power of neutrinos legendary. Even the sun can penetrate. Information is adorable.

If the particle study the sun, the stars are believed to be able to find answers to many secrets, including the space.

But when it descends into the galaxy, the explosive inside it. The central part of its expanding multi-million times. At that time, the central part of the star formation in the immeasurably great pressure. Which is a product of the pressure, even out of a nuclear 'Escape' can become. However, even with such a death to escape from the star, only one sub-nuclear particle Neutrino.

So, a little bit better about niyutrinovaip to examine the various secrets, why the star began to die, the scientists hope to get an answer.

In 1980 mincumaiyillata, weight yillata beta particles from the nucleus of a cell that come with the first rays of the ulpkanpauli (Wolfgang Pauli), the scientists said. These particles called neutrons. But by 1932, along with a proton from the neutron nuclear James Chadwick discovered the particle. In reality the two initiatives were proposed Paoli neutral particles. With one proton in the nucleus of the atom is found. It is based on neutron particle of nuclear science.

Beta particles will come out with another one mincumaiyarra misshapen, the light is a particle. That may even be zero. The Enrico Fermi discovered that he had a particle with half-cycle. Ciniyarana neutron in the nucleus of the atom to distinguish it from the neutrino named Fermi.

The neutrino was invented

OPERA (Oscillation Project with Emulsion- Tracking Apparatus) set foot structure to determine the secret of the Association neutrinos. It is in Geneva, CERN (CERN) Research Institute created by neutrinos at Super Proton cinkrot Ron Weed is located in Italy kirancaco LGNS
research center beneath the earth, underground and 733 km Has all the facilities in terms of its possible range. Dow neutrinos between the miyuvan niyutri nokkal wave yurutal (Oscillation) show precisely this research has been discovered. CERN (CERN) - a quality in another kind of neutrino hatched niyutri Know if it's the test that is found in the Gran caco access. Information about the speed of the neutrino (a) the fact that the main purpose of ivvaraycci finding weed.

The CERN laboratory test was conducted to find out the speed of neutrinos vekappari. Accordingly, the neutrino departure from one place to another place to secure a certain amount of time to find out how much. Nerattin neutrino particle, divided by the distance it took to cross the two
center availability of its fast simple testing adapted to CERN. But the gift is not as simple as each stage of the test. The invisible neutrino particles reach the target, the time of departure and the time it's not an easy thing to note is accurate. It has been a challenging task. In fact, it is difficult to detect neutrinos to undergo the test. In the last three years of research that could be kutpatut 16000 tukalkalaiye CERN neutrino liked enough to know that it's not, and has the difficulty is obvious.

With high-energy proton beam collisions on the packets when the graphite-small cell produced with different income levels.

Neutrinos are produced in small cells, some of which turned out to be. CERN laboratory generated beneath the earth in the niyutri nokkal kirancaco traveling in a straight line, and this will be the laboratory. Accessible to all of the energy that can travel through the earth, and have also emerged. Hangs between less energy. Departure from CERN Neutrinos between miyuvan Dow (Tau) to become neutrons. Vurutalai causes a wave of returning it back to the old levels. They arrived with a high-energy neutrino Neutrinos to Gran cacovinai titektar (and handler) will be caught by the machine. Niyutri nokkal CERN lab will update from time scales the image up, kirancaco neutrinos arrived at the age of departure and arrival times are calculated as compared to the film.

In this study, two research center pass within the distance of 2.4 ml only the second time scale. The most important is the change of time. In two places at the same time because of the time change. This is different in the two locations to coordinate times to act in the most important part of the study. Etana GPS (Global Positioning System) is done through the integration. Establishes a connection between two locations via radio waves, which are brought.

Thus, the speed of light in a vacuum to the neutrinos in the experiment went ahead vekattaivita 60 nano seconds. That is the speed of light 29, 97, 92, 458 m / second. Neutrino's speed 29, 97, 98, 454 m / second. The difference between the 5996 m / second. 5996 meters in one second than light neutrino would go ahead. In fact, the speed of light neutrino mincukirata? No false account? Scientists who did not believe that the repetition of the raid, and was watched 15000 times. All the time I got the same result. Announcing this after a little hesitation, yalarkal announced to the outside world. There is no reason why it did so.

Albert Einstein considered the greatest scientist of the twentieth century. His special theory of analogy (Special General Relativity Theory) is one of the basic things that the speed of light. At speeds much faster than the speed of light in the universe and atanaivita do not try to be anyone, who would not try so Einstein. In the twentieth century, scientists looked at how their own thinking enpatanaivita special relativity theory proposed by Einstein in 1905, following the thought that it would be appropriate. In fact, over a century of physics with an occurrence limit of the speed of light was the way of thinking. Significant changes, such as scientific fact. And a century is not an easy story to edit all subjects. However, according to new scientific discoveries to become marittane. Nothing has changed in the world.

Research Station, set in vekualat inside the mountain. Katukalukko the hill outside, fields do not affect
In arayccikkutat any dangerous radiation used items. Environment, air system, water, land does not affect the fertility of neutrino research.
Benefits:
This study physics, computer science,
Internship for Engineering Students
Available. Neutrino Observatory is not necessarily for the purpose of research.